இன்று வழங்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்
அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் இன்றையதினம்(08) வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.
கேகாலையில்(Kegalle) நேற்றையதினம்(07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட தொகை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 10,000 ரூபாவுடன், 08ஆம்(இன்று) திகதி முதல் நிறுவனங்களுக்கு பணம் விடுவிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.
நாட்டில் உள்ள 28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கப்படும். இது உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இலங்கையில் (Sri Lanka) அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதியமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.
இந்த சம்பளத்தில் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கூடுதலாக ஒவ்வொரு பணியாளருக்கும் அதிகரிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |