சந்திரிக்காவால் மைத்திரிக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல் : பதவி பறிபோகும் அபாயம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க(Chanrika Bandaranayake Kumarathuge) நீதிமன்றம் சென்று என்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார். எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருக்கிறது. இந்த சவால்கள் அனைத்துக்கும் நாங்கள் முகம்கொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
கடுவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சவாலுக்கு நாங்கள் முகம்கொடுப்போம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாற்றில் பல தடவைகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. அப்போது எமக்கு ஏற்பட்ட சவால்களை முறியடித்துக்கொண்டு கட்சியை முன்னுக்கு கொண்டு செல்ல நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அதேபோன்று தற்போதும் கட்சிக்கு எதிராக பல்வேறு சவால்கள், எதிரான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சவால்களை வெற்றிகொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
குறிப்பாக கட்சியின் செயலாளர் என்னை அடிப்படையாகக்கொண்டு வழக்கு தொடுத்திருக்கிறார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நீதிமன்றம் சென்று என்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்.
எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருக்கிறது. இந்த சவால்கள் அனைத்துக்கும் நாங்கள முகம்கொடுப்போம். எமது நியாயத்தன்மையை நீதிமன்றில் சமர்ப்பிப்போம். நீதிமன்றம் பக்கச் சார்பற்ற தீர்ப்பொன்றை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். அதன் பிரகாரம் இந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு, எம்முடன் கூட்டணி அமைக்க ஒன்றுபட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாங்கள் எதிர்வரும் தேர்தலில் பலம்மிக்க கட்சியாக முன்வருவோம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு பூராகவும் விழுந்து விழுந்து மீள எழும்பிய கட்சியாகும். அதனால் யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு எவவாறான நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. நாங்கள் தொடர்ந்தும் முன்னுக்கு செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
