பஞ்சாங்கங்களை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுங்கள்: கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள்
சித்திரைப் புதுவருடப் பிறப்பு தொடர்பில் சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவம் பஞ்சாங்கங்கள் குறிப்பிட்டுள்ளதை கடைப்பிடித்து சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுமாறு கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குழப்பும் வகையிலான கருத்துகளை வெளியிடும் குருமார்களை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான செயற்பாடுகளை குருமார்கள் தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
மட்டடக்களப்ப ஊடக அமையத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கருத்து தெரிவிக்கையில்,
மக்களை குழப்புகின்ற செயற்பாடு
“இரண்டு தினங்களுக்கு முன்பதாக ஒரு செய்தியை பார்க்கக் கூடியதாக இருந்தது. நமது மூத்த மத குருமார்கள் எமது மக்களை குழப்புகின்ற வகையில் நமது நாட்டிலே இரண்டு பஞ்சாங்கங்கள்.
ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் இரண்டாவது திருக்கணித பஞ்சாங்கம். இவற்றில் ஒவ்வொரு வருடமும் அதில் குறிப்பிட்டுள்ளதன் படி எமது மக்கள் ஒவ்வொருவரும் எதுவித குழப்பங்களும் இன்றி இந்த புது வருட கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மூத்த குரு வெளியிட்ட செய்தியினால் மக்கள் பல்வேறு மனக்கிளேசங்களுக்கு உண்டாகி இருக்கின்றார்கள்.
இவ்வாறு மக்களை குழப்புகின்ற வகையில் செயல்படுகின்ற குருமார்களை கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த தமிழ் சிங்கள புத்தாண்டானது இதுவரை காலமும் நாங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் எல்லாம் எம்மை விட்டு அகன்று இந்த குரோதி வருடத்திலே நாங்கள் அனைவரும் சாந்தியடனும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்படுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்.” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |