இத்தாலி வாகன விபத்தில் இலங்கையர் பலி! பெயர் விபரம் வெளியானது
இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது பேர்காமோவைச் சேர்ந்த வர்ணகுலசூரிய சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
விபத்திற்கான காரணம்
சஞ்சீவ பிரதீப் தனிப்பட்ட நோக்கத்திற்காக துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது அதே திசையில் சென்ற லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேர்கம போக்குவரத்து பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த சஞ்சீவ பிரதீப் அவசர அம்பியுலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்திர் உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் இலங்கையின் மாரவில பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



