மகிந்தவுக்காக 35 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களுக்காக வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிகம் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 110 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மகிந்தவுக்காக 32 கோடி 65 லட்சத்து 82 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆர். பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவின் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 110 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வருடாந்த பாதுகாப்பு செலவுகள் பின்வருமாறு,

சந்திரிகா குமாரதுங்க 9 கோடி 88 லட்சத்து 71ஆயிரத்து 866 ரூபாய்,
மகிந்த ராஜபக்ச 32 கோடி 65 லட்சத்து 8271 ஆயிரத்து 819 ரூபாய்,
மைத்திரிபால சிறிசேன 18 கோடி 51 லட்சத்து 66 ஆயிரத்து 535 ரூபாய்,
கோட்டாபய ராஜபக்ஷ 3 கோடி 91 லட்சத்து 41 ஆயிரத்து 488 ரூபாய்,
ஹேமா பிரேமதாச 2 கோடி 98 லட்சத்து 78 ஆயிரத்து 008 ரூபாய்,
ரணில் விக்கிரமசிங்க 25 கோடி 33 லட்சத்து 95 ஆயிரத்து 249 ரூபாய்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாவலர்களுக்கான மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், உணவு மற்றும் குடிநீர், தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் என மொத்த செலவுகள் 110 கோடி ரூபாயை தாண்டுவதாக தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri