இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் இலங்கையில் கைது
இலங்கை (Sri Lanka) கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்டு, 23 இந்திய கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளனர்.
இதில் இந்திய கடற்றொழிலாளர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், காங்கேசன்துறையில் உள்ள கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை
இதேவேளை, தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகில் வந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது இலங்கையர்களும் நெடுந்தீவு கடலில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் அண்மையில் தமிழகத்திற்கு சட்டவிரோதமாகச் சென்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri