கொழும்பில் குடும்பஸ்தர்கள் மூவர் கைது
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின்போது கல்கிஸை மற்றும் உடுகம பகுதிகளில் குடும்பஸ்தர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதவல வீதிக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 40 வயதுடைய மக்கொன மற்றும் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 10 கிராம் 350 மில்லிகிராம் மற்றும் 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உடுகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
இதேவேளை, இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உடுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமின் அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 46 வயதுடைய உடுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். சந்தேகநபரிடம் இருந்து 12 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர் மேலதிக விசாரணைகளுக்காக உடுகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
