தமிழக காவல்துறை தொடர்பில் பாரதீய ஜனாதாக் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிப்பானை இம்ரான் தமிழகத்துக்குள் நுழைவதை தடுக்க,தமிழக காவல்துறை தவறிவிட்டது என்று பாரதீய ஜனாதாக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக தலைவர் வீ.அண்ணாமலை இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த முகமது நஜிம் முகமது இம்ரான் என்கிற கஞ்சிபானி இம்ரான் ராமேசுவரத்தின் ஊடாக இருந்து தமிழகத்திற்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
பிணையில் செல்ல அனுமதி
கொலைக்குற்றம் மிரட்டல் போன்ற பல கொடூரமான குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான இம்ரான் 2019 ஆம் ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த வாரம் இம்ரானை இலங்கையின் நீதிமன்றம் பிணையில் செல்ல
அனுமதித்தது.
இதனையடுத்தே இம்ரான் தமிழகத்துக்கு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.