அம்பாறையில் பொலிஸார் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம்! தொடரும் அராஜகம்
அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து கடந்த 19ஆம்திகதி தமிழ் இளைஞரொருவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தசம்பவம் 2025.12.19 ஆம் திகதி பிற்பகல் 5 மணியளவில் நடந்திருந்த போதும் இதுதொடர்பில் பொதுவெளியில் எந்த செய்திகளும் வெளிவரவில்லை என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஜெயசுதாசன் தனுஷன் எனும் 26 வயது இளைஞர் மீதே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது
போதைப்பொருள் பாவனை
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள், நண்பர்களூடாக மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனிடம் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் இந்தசம்பவம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனை உடையவர் எனவும், சூதாட்டத்தில் ஈடுபடுகிறவர் எனவும் தமக்கு தகவல் கிடைத்துச் சென்று, அவரைக் கைது செய்ய முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அந்த இடத்தில் தங்களுடைய துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாகவும் பொலிஸார் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்தநிலையில் காயமடைந்த இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பிலே எந்தவித கருத்துக்களும் வெளிப்படுத்தப்படாமல் ரகசியமாக காணப்பட்ட நிலையில் இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
26 வயது நிரம்பிய திருமணமான முச்சக்கர வண்டி ஓட்டுனரான குறித்த இளைஞன் பொலிஸார் கூறுவது போன்று எவ்விதமான பாவனையும், கெட்ட பழக்கங்களும் அற்றவர் என அவருடைய நண்பர்களும், உறவினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri