ஆஷஸ் தொடரை 3-0 கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து

Cricket England Cricket Team Australia Cricket Team
By Shadhu Shanker Dec 21, 2025 08:08 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியில் 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 371 ஓட்டங்களும், இங்கிலாந்து 286 ஓட்டங்களும் எடுத்தன.

85 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 3ஆவது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 271 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

டிராவிஸ் ஹெட் 142 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இந்திய அணிக்குள் இணையும் அதிரடி வீரர்! அணியின் முழுவிபரம்

2 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இந்திய அணிக்குள் இணையும் அதிரடி வீரர்! அணியின் முழுவிபரம்

4ஆவது நாள்

நேற்று (2025.12.20) 4 ஆவது நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட் 170 ஓட்டங்களிலும் (219 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். சற்று நேரத்தில் அலெக்ஸ் கேரி 72ஓட்டங்களில் (128 பந்து, 6 பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார்.

aus vs eng

அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் 10 ஓட்டங்களிலும், அணித் தலைவர் பெட் கம்மின்ஸ் 6 ஓட்டங்களிலும், நேதன் லயன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், ஸ்காட் போலன்ட் ஒரு ஓட்டங்களிலும் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பு அவுஸ்திரேலியா 84.4 ஓவர்களில் 349 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

ஆஷஸ் தொடரை 3-0 கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து | Australia Beat England To Win Ashes 3

கடைசி 6 விக்கெட்டுகள் 38 ஓட்டங்களிற்குள் சரிந்தன. இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங்கு 4 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதிக விலைக்கு ஏலம் போன 2- UNCAPPED வீரர்கள்! படைக்கப்பட்ட சாதனை

அதிக விலைக்கு ஏலம் போன 2- UNCAPPED வீரர்கள்! படைக்கப்பட்ட சாதனை

வெற்றி இலக்கு

முடிவில் அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிக்கு 435 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வெற்றியிலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் அடியெடுத்து வைத்தனர். பென் டக்கெட் 4 ஓட்டங்களிலும், ஏலி போப் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து ஜோ ரூட், ஜாக் கிராவ்லியிடன் இணைந்தனர். இருவரும் சிறப்பாக செயல்பட்டு அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சித்தனர். அவுஸ்திரேலியா 109 ஓட்டங்களை எட்டிய போது ஜோ ரூட் 39 ஓட்டங்களில் (63 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

ஆஷஸ் தொடரை 3-0 கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து | Australia Beat England To Win Ashes 3

டெஸ்டில் ஜோ ரூட் விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்துவது இது 13ஆவது முறையாகும். அடுத்து வந்த ஹாரி புரூக்கும், கிராவ்லிக்கு பக்கபலமாக இருந்தார். ஜாக் கிராவ்லி 102 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

சிறப்பாக ஆடிய ஹாரி புரூக் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

நிலைத்து நின்று ஆடிய ஜேக் கிராவ்லி 85 ஓட்டங்களில் (151 பந்து, 8 பவுண்டரி) நேதன் லயன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கி பெவிலியன் திரும்பினார்.

ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 63 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடியது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 2 ஓட்டங்களுடனும், வில் ஜாக்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அவுஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

5ஆவது நாள்

5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்றையதினம் (2025.12.21) நடந்தது. ஜேமி சுமித், வில் ஜாக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டு வந்தனர். ஆனால் அந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

ஜேமி சுமித் (60) ஓட்டங்களிலும், வில் ஜேக்ஸ் (47) ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியில், 102.5 ஓவரில் இங்கிலாந்து அணி 352 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போராடி தோல்வியடைந்து.

ஆஷஸ் தொடரை 3-0 கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து | Australia Beat England To Win Ashes 3

இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று ஆஷஸ் கிண்ணத்தை தக்க வைத்துள்ளது.

மேலும் 5 போட்டிகள் என்ற தொடரில் 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 85 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

you may like this..

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US