அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் அணி
தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்கேற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணி, புளோரிடாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
புளோரிடாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஃபோர்ட் லாடர்டேல்( Fort Lauderdale) நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு புளோரிடா விமான நிலையங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உள்ளூர் அதிகாரிகளால் தரையிறக்கப்பட்டுள்ளன.
புறப்படுவதில் தாமதம்
டி20 உலகக் கிண்ணப்போட்டிகள் நடத்தப்படும், அமெரிக்காவில் உள்ள மூன்று மைதானங்களில் ஃபோர்ட் லாடர்டேலில் உள்ள மைதானமும் ஒன்றாகும்.
முன்னதாக அங்கு நடந்த இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.

இதனையடுத்து இலங்கை அணி புதன்கிழமை ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு விமானத்தில் செல்லவிருந்தது, ஆனால் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அவர்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் ஜூன் 17, திங்கட்கிழமை தனது இறுதிக் குழு ஆட்டத்தில் செயின்ட் லூசியாவில் நெதர்லாந்துடன் இலங்கை விளையாடுகிறது. இதுவரை தாம் விளையாடிய மூன்று ஆட்டங்களில் இரண்டில் இலங்கை தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam