சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தனியார்மயம் : இந்திய நிறுவனங்களுக்கு ஆர்வமில்லை
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் அரச விமான சேவையும் தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட் நட்டால்(Richard Nuttall) தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்கு அமைய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலேயே சிறிலங்கன் ஏர்லைன்ஸூம் அதில் அடங்குவதாக நட்டால் இந்திய செய்திச்சேவை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பேச்சுவார்த்தை
இந்த செயற்பாடு, ஓரிரு மாதங்களில் முடிக்கப்படும் என்றும் நட்டால் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி விமான நிறுவனமும் முதலீட்டாளரைத் தேடி வருவதாகவும், மூன்று விண்ணப்பதாரிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நட்டால் கூறியுள்ளார்.
எந்தவொரு இந்திய நிறுவனமும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் ஆனால் விண்ணப்பத்தை அனுப்பியுள்ள ஒரு கூட்டமைப்பில் சில இந்தியர்கள் இருப்பதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
