வெளிநாட்டு தம்பதியை நெகிழ்ச்சி அடையச் செய்த பேருந்து சாரதி
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஸ்பெயின் நாட்டு பயணி தொலைத்த கைக்கடிகாரத்தை உரிய நபரிடம் ஒப்படைத்த பேருந்து நடத்துநரின் செயல் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து தெஹியத்தகண்டிய மற்றும் நுவரகலைக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஸ்பெயின் நாட்டு சுற்றுலா தம்பதி பயணித்துள்ளனர்.
இதன்போது ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள அப்பிள் கடிகாரத்தை தொலைத்துள்ளனர்.
பஸ் உரிமையாளர்
தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் உரிமையாளரிடம் காணாமல் போன கடிகாரம் தொடர்பில் வெளிநாட்டு தம்பதி தகவல் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் பயணித்த பஸ் உரிமையாளர்களை கண்டுபிடித்து காணாமல் போன கடிகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பேருந்தை சுத்தம் செய்யும் போது கடிகாரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பேருந்து நடத்துநர் குறிப்பிட்டுள்ளார். பேருந்து மஹியங்கனை திரும்பியதும், உரிமையாளர்களிடம் கடிகாரத்தை வழங்குதாக உறுதியளித்துள்ளனர்.
வெளிநாட்டு தம்பதி
அதற்கமைய, பேருந்து நடத்துநரால் வெளிநாட்டு தம்பதியிடம் கடிகாரம் ஒப்படைக்கப்பட்டது.
தொலைந்து போன கடிகாரத்தை திரும்ப பெற்றதில் வெளிநாட்டு தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இலங்கையில் வாழும் நேர்மையான மக்களுக்கு மரியாதைக்குரிய நன்றியை தெரிவித்தனர்.




