பிரான்சில் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய இலங்கையர்
பிரான்சில் இரட்டை கொலை வழக்கில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Saint-Ouen-l'Aumône (Val-d'Oise) நகரில் தாயும்,மகளும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கொலை செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில மரபணு சான்றுகளை சேகரித்து, குற்றவாளியை தேடி வந்த நிலையில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மறுப்பு
இந்நிலையில் கடந்த புதன்கிழமை Rennes (Ille-et-Vilaine) நகரில் வைத்து 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபருக்கும் பொலிஸார் வைத்துள்ள மரபணு சான்றுகளுக்கும் (DNA) தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், சந்தேகநபர் அதனை மறுத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam