சட்டப்படி வேலை இயக்கத்தில் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் பணிக்குழு உறுப்பினர்கள்
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் பணிக்குழு உறுப்பினர்கள் சங்கம், விமானங்களில் தமக்கான உணவு கொடுப்பனவை மறு ஒதுக்கீடு செய்வது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, சட்டப்படி வேலை இயக்கத்தை ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்துக்கு இது தொடர்பாக பல தடவைகள் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த சட்டப்படி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், பணிக்குழு உறுப்பினர்கள், தங்களின் கையேட்டில் கூறப்பட்டுள்ள கடமைகளை மாத்திரம் கண்டிப்பாக கடைபிடிப்பார்கள். அத்துடன், உரிய பணி நேரங்களில் மாத்திரமே பதிலளிப்பார்கள்.
வருடாந்த நிலையான அதிகரிப்புகள்
அத்துடன், பாதுகாப்பு மற்றும் அவசரகால நடைமுறைகள் கையேட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, அனைத்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளும் துல்லியமாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த நிலையான அதிகரிப்புகள், வருகை ஊக்கத்தொகை கட்டணம், குறைந்தபட்ச உற்பத்தித்திறன் கடமை உத்தரவாதம் உட்பட்ட கோரிக்கைகளை பணிக்குழுவினர் முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
