இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை!
கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, தங்கள் சூரிய படல அமைப்புகளைத் தாமாக முன்வந்து அணைக்குமாறு கூரை சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.
சூரிய மின் உற்பத்தி
அத்துடன் நாளை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல் - இந்திரஜித்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
