மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (23) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கண்டி பல்லேகலையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வரையறுக்கப்பட்ட 44 ஓவர்களில் 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.
செர்பேன் ரதபோர்ட் 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மூன்றாவது ஒருநாள் போட்டி
இதனையடுத்து துடுப்பாடிய இலங்கை அணி, 38.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.

இதில் சரித் அசலங்க 62 ஓட்டங்களை பெற்றார். இதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2:0 என்ற நிலையில் வெற்றி பெற்றுள்ளது
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    தேவகியாக, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் நிஜ அம்மா தான் நடிக்கிறாரா?... வெளிவந்த சுவாரஸ்ய தகவல் Cineulagam
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam