சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட்டில் நிலைநாட்டப்பட்ட புதிய உலக சாதனை
சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் சிம்பாப்வே அணி உலக சாதனையை படைத்துள்ளது.
கென்யாவில் நேற்று (23) இடம்பெற்ற காம்பியாவுக்கு எதிரான ஐசிசி ஆடவர் 20க்கு20 உலகக் கிண்ண ஆபிரிக்கா துணை பிராந்திய தகுதிச் சுற்று பி ஆட்டத்தில், சிம்பாப்வே அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதன்படி இதுவரை காலமும் உலக சாதனையாக இருந்த 2023இல் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள அணி பெற்ற 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 314 என்ற ஓட்ட சாதனையை முறியடித்துள்ள சிம்பாப்வே, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இரண்டாவது அதிவேக சதம்
இதில் சிக்கந்தர் ராசா 43 பந்துகளில் 15 ஆறு ஓட்டங்களுடன் 133 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

சிக்கந்தர் ராசாவின் சதம் வெறும் 33 பந்துகளில் பெறப்பட்டுள்ளது, இது ஆடவர் 20க்கு 20 போட்டி ஒன்றில் இரண்டாவது அதிவேக சதமாக அமைந்தது.
இதற்கு முன்னதாக எஸ்தோனியாவின் சாஹில் சவுகான் 27 பந்துகளில் இந்த சாதனையை படைத்திருந்தார்.
நமீபியாவின் ஜோன் நிகோல் லோஃப்டி-ஈட்டனும் 2024 ஆம் ஆண்டில் வெறும் 33 பந்துகளில் சதம் பெற்றிருந்தார். இது இவ்வாறிருக்க நேற்று சாதனைப் போட்டியில் சிம்பாப்வேயின் இன்னிங்ஸில் 27 ஆறு ஓட்டங்களும் அடங்கியிருந்தன.
6 விக்கெட் இழப்பு
இது ஆண்கள் 20க்கு 20 போட்டிகளில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஆறு ஓட்டங்களாக அமைந்துள்ளன.

முன்னதாக கடந்த ஆண்டு 3 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்கள் என்ற சாதனை இன்னிங்ஸின் போது, மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் 26 ஆறு ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக, சிம்பாப்வே அணி சீசெல்சுக்கு எதிராக இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற 20க்கு20 போட்டி ஒன்றில், 5 விக்கெட் இழப்புக்கு 286 ஒட்டங்களை பெற்றது.
எனினும் இந்திய அணி, பங்களாதேசுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்களை பெற்றது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam