ஐபிஎல் போட்டிகளில் அணி ஒன்றின் தலைமைத்துவத்தை விரும்பும் இந்திய வீரர்
தற்போது கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் இந்திய கிரிக்கட்டின் வேப்பந்து வீச்சாளர் முகமது சமி, ஐபிஎல் உரிமையாளரிடம், தாம் அணித்தலைவராக செயற்படுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் உடனான அவரது எதிர்காலம் குறித்து ஊகங்களில் செய்திகள் பரவி வருவதால், கிரிக்கெட் சவால்களுக்கு முழு உடற்தகுதியுடன் திரும்புவதற்காக, சமி தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
2022ஆம் ஆண்டில் இருந்து சமி, குஜராத் டைட்டன் அணிக்காக விளையாடி வருகிறார்.
தயங்கப்போவதில்லை
இந்தநிலையில், ஐபிஎல்லில் தனது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் தலைமைப் பொறுப்பை பெற்றுக்கொள்ள தயங்கப்போவதில்லை என்று அவர் ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அதனை யாரும் மறுப்பார்கள் என்று தாம் நினைக்கவில்லை என்று சமி குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri