ஐசிசி வரலாற்றில் நியூசிலாந்துக்கு முதல் சம்பியன் கிண்ணம்
ஐசிசியின் 9ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்த தொடரில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றியை தனதாக்கியுள்ளது.
இந்நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
அபார வெற்றி
இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதையடுத்து, 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. 9 விக்கெட்டுக்களை இழந்த 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் நியூசிலாந்து 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |