சொந்த மண்ணில் வைத்து இந்தியாவை தோற்கடித்த நியூஸிலாந்து
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி, 8 விக்கெட்டுக்களால் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதனையடுத்து துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 402 ஓட்டங்களை பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடர்
இந்தநிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி 462 ஓட்டங்களை பெற்றநிலையில், நியூஸிலாந்துக்கு 107 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த 462 ஓட்டங்களில் சர்பராஸ்கானின் கன்னி சதத்துடன் கூடிய 150 ஓட்டங்களும் அடங்கியிருந்தன.
இந்த இலக்கை நோக்கி துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 110 ஓட்;டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இதன் மூலம் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட தொடரில், நியூஸிலாந்து ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, மகாராஸ்டிர மாநிலம் பூனேயில் ஒக்டோபர் 24ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |