சர்பராஸ்- ரிசப் சிறப்பாட்டத்தால் வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்திய அணி!
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கட் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து, நியூஸிலாந்து அணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களான சர்பராஸ்கான் மற்றும் ரிசப் பன்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சாத்தியமாகியுள்ளது.
இந்த ஆட்டத்தில் சர்பராஸ் கான் நெருக்கடியில் இருந்த இந்திய அணிக்கு சதம் ஒன்றையும் பெற்று 150 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சர்பராஸ் கான்
மேலும், ரிசப் பன்ட் சதத்துக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனை தவிர கே எல் ராகுல் உட்பட்ட ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக இந்திய தமது இரண்டாம் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களுக்கு தமது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து நியூஸிலாந்து அணிக்கு 107 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இரண்டாம் இன்னிங்ஸ்
இதனைடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி துடுப்பாட ஆரம்பித்தபோதும் மழை காரணமாக இன்றைய நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் இந்திய 46 ஓட்டங்களையும், நியூஸிலாந்து அணி 402 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |