இங்கிலாந்தை தோற்கடித்த பாகிஸ்தான் : 20 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இரு வீரர்கள்
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிககெட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதியன்று ராவல்பிண்டியில் ஆரம்பமாகிறது.
இந்தநிலையில் நேற்று முடிவடைந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி தமது முதன் இன்னிங்ஸில் 366 ஓட்டங்களை எடுத்தது இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 291 ஓட்டங்களை பெற்றது.
புதிய சாதனை
இந்தநிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்களை பெற்ற நிலையில், தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை ஓட்ட இலக்கை எட்ட முடியாமல், 152 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்த வெற்றி கடந்த பல போட்டிகளில் தோல்விகளை சந்தித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இதேவேளை நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பாகிஸ்தான் சஜித் கான், நோமன் அலி ஆகியோர் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினர்.
முதல் இன்னிங்ஸ்
இந்த இரண்டு வீரர்கள் மாத்திரம், இங்கிலாந்து அணியின் இரண்டு இன்னிங்ஸிலும் அந்த அணியின் 20 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியமையே அந்த சாதனையாகும்.
இதில் சஜித் கான், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் 7 விக்கெட்டுக்களையும் நோமன் அலி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின்போது, நோமன் அலி 8 விக்கெட்டுக்களையும், சஜித் கான் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
