இலங்கையில் வரலாறு காணாத மாற்றத்தை பதிவு செய்த தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை உச்சம்தொட்டுள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இன்று (28) நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை $5250 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை நிலவரம்
அதன்படி, இன்று காலை கொழும்பு தங்கச் சந்தை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, தங்கத்தின் மொத்த விலை ரூ.10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று, ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.374,600 ஆக பதிவாகியுள்ளது..
இதே நேரத்தில், நேற்று ரூ.394,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை இன்று ரூ.405,000 ஆக அதிகரித்துள்ளதாக தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வல்லுநர்கள் எச்சரிக்கை
இதேவேளை, தங்கம் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நகை வாங்குபவர்கள் விலை குறையும் வரை காத்திருக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக சர்வதேச சந்தை போக்கு மற்றும் உள்ளூர் தேவை அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்படுகின்றது.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam