இலங்கை மகளிர் அணி செம்பியன் பட்டத்தை வென்றது
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மானில் நேற்று (நவம்பர் 25) நடைபெற்ற ICC மகளிர் வளர்ந்து வரும் நாடுகள் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், அயர்லாந்து மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி செம்பியன் பட்டத்தை வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆரம்ப துடுப்பாட்டம்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விஷ்மி குணரத்ன மற்றும் சஞ்சனா கவிந்தி ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
இந்த வெற்றியின் மூலம் தொடரில் விளையாடிய எட்டு போட்டிகளிலும், தோல்வியின்றி தொடர்ச்சியாக வெற்றிபெற்று, இலங்கை மகளிர் அணி செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.