மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
எதிர்வரும், 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மகளிர் சர்வதேச ஒருநாள் இலங்கை கிரிக்கெட் மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த குழாமில், ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ள அனேகமான வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சமரி அத்தபத்து தலைமையில் 16 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு நேற்று பெயரிட்டது.
சச்சினி நிசன்சலா
சுமார் 2 வருடங்களின் பின்னர் சச்சினி நிசன்சலா மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அவர்களது அனுபவம் இலங்கை அணிக்கு சாதகமான முடிவுகளைப் பெற்றுக் கொடுக்கும் என கருதப்படுகிறது. இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஜூன் 15, 18, 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதன்படி இலங்கை குழாமில் விஷ்மி குணரட்ன, ஹன்சிமா கருணாரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷிகா சில்வா சமரி அத்தபத்து (c), காவிஷா டில்ஹாரி, ஓஷாதி ரணசிங்க, இனோஷி ப்ரியதர்ஷனி, அச்சினி குலசூரிய, சுகந்திகா குமாரி, உதேஷிகா ப்ரபோதனி, காவ்யா காவிந்தி, சச்சினி நிசன்சலா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |