இலங்கைக்கு கிடைத்த வருமானம்..! மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறையிலிருந்து பெறப்பட்ட வருமானம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வருவாயாக நாடு பெற்ற வருமானம்
அதன்படி, 2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் சுற்றுலா வருவாயாக நாடு பெற்ற வருமானம் 1,360 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், 2025 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் சுற்றுலா வருவாய் 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுற்றுலா வருமானம் 11.9% குறைந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலா வருமானம் 155.7 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.
பணப்பரிமாற்ற தொகை
அதேசமயம் கடந்த ஆண்டு மே மாதத்தில் அது 164.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில், 2026 ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றமாக நாடு பெற்ற தொகை 3,909.7 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்ற வருமானம் $3,102.2 மில்லியனாக இருந்தது, இது இந்த ஆண்டு வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri