தேசிய அடையாள அட்டைக்கு டின் இலக்கம்: நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்க டின் இலக்கத்தை பிரதான இலக்கமாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கும் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரிப் பதிவில் டின் இலக்கம் வழங்கும் தொடர்பான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தயாரிக்கப்படவுள்ள அமைச்சரவைப் பத்திரம்
எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு அதே இலக்கத்தையே பிரதான இலக்கமாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்து அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக 6 நிறுவனங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
இதுவரை 4 நிறுவனங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மேலும் இரண்டு நிறுவனங்களின் பரிந்துரைகள் பெறப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |