இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணி ஒருவரை வைத்து புகைப்படம் எடுப்பதற்காக காட்டு யானைக்கு அருகில் சென்றுள்ளனர்.
ஆபத்தான செயல்
இது ஆபத்தான செயற்பாடாகும் எனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் காட்டு யானைகள் வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வீதியோரங்களில் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு அருகில் சில சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் எடுத்தல் மற்றும் உணவுகளை வழங்கும் ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
புகைப்படம் எடுத்தல்
வீதியின் அருகே வரும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் உள்ளதால், அந்த விலங்குகள் தினமும் இந்த வீதியில் சுற்றித்திரிகின்றன.
எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பயணிகள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
