அரசியலுக்கு வருமாறு சனத் நிஷாந்தவின் மனைவிக்கு அழைப்பு
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை அரசியலுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், சனத் நிஷாந்த தொடர்பில் சமூகத்தில் தவறான சித்தாந்தத்தை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சில தரப்பினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
