இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் மோதல்களினால் ஏற்படும் விபத்துக்கள் முகம் சிதைவதற்கு முக்கிய காரணம் எனவும், வாய் புற்று நோயினால் முகம் சிதைவு ஏற்படுவதாகவும் கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. எச்.எம்.கே. அபேசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தந்தையின் முகம் இதயத்திற்கு மகிழ்ச்சி, முக குறைபாடுகளை மீட்டெடுக்கலாம்' என்ற தலைப்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் இந்த விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைபாடுகள்
மேலும் பிறப்பு மற்றும் பாலுறவு மூலம் பரவும் வைரஸ்களாலும் முக குறைபாடுகள் ஏற்படுவதாகவும், விலங்குகள் கடித்தல் மற்றும் தாக்குதலால் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த குறைபாடுகளை மிக நுட்பமான முறையில் மீட்டெடுக்கும் அனைத்து வசதிகளும் நம் நாட்டு அரச வைத்தியசாலைகளில் இருப்பதாகவும், அதற்காக அரசு பெருமளவு பணம் செலவழிப்பதாகவும் வைத்தியர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |