யாழில் இரு உணவகங்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ். வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக நீதிமன்றினால் 21000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷினால் இன்றைய தினம் (2024.02.22) தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது விசாரணை இடம்பெற்றதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்திற்கு அப்பாற்பட்ட வகையில் உணவகத்தை நடாத்தியமை உட்பட 07 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 21000 தண்டப்பணம் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளது.
தண்டப்பணம் அறவீடு
அத்தோடு மேலும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 36000 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் 2024.01.05 தாக்கல்செய்யப்பட்ட வழக்கானது (2024.02.16) விசாரணை இடம்பெற்றதை தொடர்ந்து சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் கரப்பான்பூச்சி மற்றும் புழுக்களுடன் உணவகத்தை நடாத்தியமை உட்பட 12 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 36000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த வழக்கானது இன்றைய தினம் மன்றிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொதுச்சுகாதார பரிசோதகரினால் மூடுவதற்கான கட்டளையை பெறுவதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டிருந்ததுடன் வழக்கானது கட்டளைக்காக 2024.03.07 இற்கு திகதியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |