வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று அதற்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களிடம் அடகு வைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ருவன்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாகனங்கள் பல்வேறு முறைகேடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் வசம் இருந்த 5 வாகனங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வாடகை கார் விற்பனை
இதேவேளை அண்மையில் நிட்டம்புவ பிரதேசத்தில் வாடகை காரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட காரை உதிரி பாகங்களுக்காக விற்பனை செய்ய முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே வாகனங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் வாடகைக்கு வாகனங்களை வழங்குபவர்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |