நாமலின் குழப்பத்தால் மீண்டும் களமிறங்கும் பசில்
அமெரிக்கா சென்றுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் திடீர் வருகையை கட்சியின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி முழுவதையும் தனது நாமல் ராஜபக்ச கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சமாளிக்கும் நோக்கில் பசில் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பசிலை மீண்டும் அழைத்து வருவதற்கு எஸ்.எம்.சந்திரசேன உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் எதிர்காலம்
இதேவேளை, பசில் ராஜபக்ஷவினால் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் அழிந்துவிட்டதாக கூறும் ஒரு குழுவினர், அவரது வருகைக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
