ஈரானுக்கு எதிராக சீற்றத்துடன் களமிறங்கப் போகும் நாடுகள்: மோதல் தீவிரமடையும் அபாயம்
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர் தாக்குதல்
அதன்படி, பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பலகட்ட தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மீறி ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
எங்களது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை விடயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை.

எச்சரிக்கை
ஈரானின் இந்த அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் இந்தத் திடீர் அறிவிப்பானது மோதல்களை தீவிரமாக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.