இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள் : இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், நேற்றுவரை இஸ்ரேல் மீது சுமார் 200இற்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுமார் 250 வரையிலான ட்ரோன்களையும் ஈரான் ஏவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் மீது ஈரானினால் ஏவப்பட்டு வருகின்ற பல ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் இஸ்ரேல் வானின் மீது வைத்தே அழித்து தாக்கி விட்டிருந்தாலும் ஒரு சில ஏவுகணைகள் இஸ்ரேல் மீது விழுந்து கடுமையாக சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
குறிப்பாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் போன்ற பிரதேசங்கள் மீது ஈரானின் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததால் இதுவரை 10பேர் கொல்லப்பட்டதாகவும் 450இற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரியவருகின்றது.
இது 2 நாட்களில் ஏற்பட் இழப்பு. இந்தப் பின்னணியில் ஜெருசலேம் நகரம் எப்படி இருக்கின்றது, போர்க்காலச் சூழலில் அந்த நகரம் எப்படி இயங்குகின்றது என்பது பற்றி விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.....
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு