விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே பிள்ளையான் பிழைத்தார் : இராணுவப் புலனாய்வு அதிகாரி தகவல்
பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ள குழுதான் என இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
பிள்ளையானை அழகுப்படுத்திய திரிபோலி குழு
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவப் புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்தக் குழுதான் 'திரிபோலி' என்ற கொலைக் கும்பல்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது” என்றார்.
'நீங்கள் புலனாய்வு அதிகாரி என்பதை எப்படி நம்புவது?' என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களை அவர் அந்தச் சிங்கள ஊடகத்துக்குக் காண்பித்தார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
