பொதுப்போக்குவரத்து, திடக்கழிவு விடயத்தில் இந்திய உதவியை எதிர்பார்க்கும் இலங்கை
இலங்கையின் பொதுப் போக்குவரத்து மற்றும் திடக்கழிவு முகாமைத்துவத் துறைகளில் எல்லை தாண்டிய ஒத்துழைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் அனுரா கருணாதிலக,இந்த கோரிக்கையை இந்திய அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளார்.
இந்திய உதவி
கேரளாவின் கோழிக்கோட்டில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இலங்கையின் அமைச்சர் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக இந்திய பத்திரிக்கையொன்று தெரிவித்துள்ளது.
சாத்தமங்கலத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், திட்டமிடப்படாத குடியிருப்புகள், நகர்ப்புற திட்டமிடல் சவால்கள், பொது வீட்டுவசதி பிரச்சினைகள் மற்றும் நகர்ப்புற மக்கள்தொகை போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த விடயங்களில், இலங்கைக்கும், கேரளாவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகள் இந்த நிகழ்வின்போது ஆராயப்பட்டன.




