இலங்கையில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்! ஸ்கொட்லாந்து பெண்ணிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் கடவுச்சீட்டு கையகப்படுத்தப்பட்ட ஸ்கொட்லாந்து பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், உடனடியாக அவரை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து நாட்டின் அபெர்டீன் நகரில் அமைந்துள்ள தொழிலாளர் நல அமைப்பு ஒன்று இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
அத்துடன் அவரது கடவுச்சீட்டை மீளப்பெறவும் அவர் பிரிட்டனுக்குத் திரும்பும் வரை இலங்கையில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனுடன் தொடர்புகொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம்

கெய்லி பிரேசர் என்ற இந்த பெண்ணுக்கு மருத்துவ காரணங்களுக்காகவே இலங்கை வருவதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது அதனை ஊக்குவிக்க தமது விசாவைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு

இதனையடுத்தே வழங்கப்பட்ட விசாவை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி கெய்லி பிரேசரின் கடவுச்சீட்டை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அண்மையில் கையகப்படுத்தியுள்ளது.
| இலங்கைக்கான அனைத்து பயணங்களையும் இரத்து செய்துள்ள வெளிநாட்டு நிறுவனம் | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        