மலேசியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் குறித்து தீவிர கண்காணிப்பு
மலேசியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விசிட் வீசா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் கூடுதலாக கண்ணிக்கப்படுவதாகவும் இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசித்த 20 இலங்கையர்களுக்கு வீசா மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் விசிட் வீசா அடிப்படையில் நாட்டுக்குள் பிரவேசித்து பின்னர் வேர்க் வீசாவாக அதனை மாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வருகை தருவதாக மலேசிய தேசிய சட்டவிரோத ஆட்கடத்தல் கண்காணிப்பு படையணி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் இலங்கையர்களை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
விமான நிலையத்தில் வீசா நிராகரிப்பு
அண்மையில் சந்தேகத்திற்கு இடமான 20 இலங்கையர்கள் விமான நிலையத்தில் வைத்தே வீசா நிராகரிக்கப்பட்டு மீண்டும் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் உரிய தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட ரீதியான முறையில் மட்டும் மலேசியாவிற்குள் தொழில்வாய்ப்பு பெற்று வருமாறு அந்நாட்டு அதிகாரிகள் இலங்கையர்களிடம் கோரியுள்ளனர்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam