இலங்கைக்கான அனைத்து பயணங்களையும் இரத்து செய்துள்ள வெளிநாட்டு நிறுவனம்
இதனடிப்படையில் அமைதியின்மை காரணமாக இலங்கைக்கான பயணங்களை மேலும் இரத்து செய்வதாக ஜேர்மனை தளமாகக்கொண்ட சுற்றுலாத்துறை முன்னணி நிறுவனமான டியுஐ அறிவித்துள்ளது.
உணவு, மருந்து,எரிபொருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்
இதனையடுத்து கடந்த மாதம் இலங்கையில் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 22 வரையான பயணங்களை டியுஐ நிறுவனம் இரத்துச்செய்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக,அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற பயணங்களை தவிர்க்குமாறு இங்கிலாந்தின் வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான அனைத்து பயணங்களும் இரத்து
இதன் விளைவாகவே துரதிர்ஷ்டவசமாக 202, ஆகஸ்ட் 22 இலங்கைக்கு புறப்படும் அனைத்து விமான பயணங்களையும் இரத்து செய்ய வேண்டியேற்பட்டுள்ளது என்று டியுஐ குறிப்பிட்டுள்ளது.
எனினும் இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும்
வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவித்தல் பொருந்தாது என்றும் டியுஐ அறிவித்துள்ளது.