இலங்கையின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நினைவூட்டல்
இலங்கையின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மையக் குழு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நினைவூட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“நீதி, அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஒவ்வொரு உறுதிமொழியும் வெறும் வார்த்தை ஜாலமாகவே குறைக்கப்பட்டுள்ளது.
இது நடவடிக்கைகளுக்கான நேரமே தவிர, உத்தரவாதங்களுக்கான நேரமல்ல. அரசாங்கம் தனது சொந்த மக்களை ஏமாற்றுவது போல் உலகை ஏமாற்ற முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கெடுப்பு
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் எக்ஸ் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 'இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்' தொடர்பான தீர்மானம் ஒன்று வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2012 முதல் பல தீர்மானங்கள் இருந்தபோதிலும், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புக்கூறலில் எந்த முன்னேற்றமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இருப்பினும், இந்த புதிய தீர்மானம் மூலம், சர்வதேச மேற்பார்வை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
