வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!
வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(10.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் குழுவினர் கப்ரக வாகனம் ஒன்றை வழி மறித்து அதனை சோதனை செய்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 22 கிலோ கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டது.

குறித்த கஞ்சா போதைப்பொருள் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam