இந்தியா எதிர்பார்க்கும் இலங்கையின் புதிய ஜனாதிபதி
இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவில் இந்தியா பெரும் குழப்ப நிலையை கொண்டுள்ளதாகவும், பெரும்பாலும் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வருவதை அந்த நாடு விரும்புவதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசியலில் எதிர்கால நகர்வு தொடர்பிலும், அதில் இந்தியாவின் எதிர்பார்ப்பு குறித்தும், எமது லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நேர்காணலில் கலந்துகொண்ட அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
இலங்கையின் மீது இந்தியாவின் உற்று நோக்கலானது பொருளாதார அரசியல் இலக்குகளை கொண்டதாக அமைந்திருக்கிறது.
கேந்திர முக்கியத்துவம் கொண்ட இலங்கையில் பாரிய முதலீடுகளை இந்தியா தற்போது மேற்கொண்டு வருகிறது.
இதில் முக்கியமாக, இலங்கையின் பங்காளி நாடான சீனாவிற்கு ஒரு போட்டி நிலையையும் உருவாக்கி வருகிறது.
இவற்றை மையப்படுத்திய ஒரு அரசியல் ஆதரவாளரை இந்தியா தற்போது எதிர்பார்க்கின்றது.
இந்நிலையில் இலங்கையின், எதிர்கால அரசியல் தலைமை தொடர்பிலும், அதில் இந்திய கொண்டுள்ள உற்றுநோக்கல்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது கீழுள்ள ஊடறுப்பு நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |