இலங்கையின் புதிய பதில் பிரதம நீதியரசர் நியமனம்
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று (10.10.2024) முற்பகல் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
2011ஆம் ஆண்டு பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பிறகு இலங்கையின் வரலாற்றில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆவார்.
பதவி உயர்வுகள்
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக இணைந்து கொண்ட பெர்னாண்டோ, 30 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், இவர் சிரேஷ்ட அரச சட்டத்தரணி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆகிய பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்.
இதனையடுத்து, சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய போது, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட அவர், மார்ச் 2018இல் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |