ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை

Russia Sri Lanka People Russo-Ukrainian War
By Vethu Mar 06, 2022 03:58 AM GMT
Report

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சமகாலத்தில் இலங்கையின் நிலைமையும் அதனை ஒத்ததாக இருப்பதாக சமூக வலைத்தளவாசிகள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

உக்ரைன் தலைநகரை விரைவாக கைப்பற்ற ரஷ்ய தலைவர் விளாடிமீர் புத்தின் தமது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனினும் 10 நாட்களாக தொடரும் கள சமரில் அது சாதகமாக மாறவில்லை என்பது யுத்த களமுனை வெளிப்படுத்துகிறது. தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் நீண்ட வரிசையில் அணிவகுத்திருந்த போதும் அது இன்னும் சாத்தியமாகவில்லை.

ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை | Sri Lanka S Long Line Is Similar To The Russian

உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போராடி வருகிறது. பல்வேறு கட்டங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்னும் இலக்கு எட்டப்படவில்லை. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யாவின் கவச வாகனங்கள் சுமார் 64 கிலோமீற்றர் தூரத்தில் அணி வகுத்து நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று இலங்கையில் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெறவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை | Sri Lanka S Long Line Is Similar To The Russian

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை அரசாங்கம் திணறி வருகிறது. மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியாத கட்டத்தில் அரசாங்கம் உள்ளது.

இந்நிலையில் எரிபொருள், சமையல் எரிவாயு, பால் மா உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களை பெற மக்கள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன. சில பகுதிகளில் சுமார் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் எற்பட்டுள்ளது.

ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை | Sri Lanka S Long Line Is Similar To The Russian

ரஷ்ய படைகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்று இலங்கையிலும் மக்கள் காத்திருக்கின்றனர். இலங்கையில் நீண்ட வரிசை என்ற சொற்பதம் தற்போது பிரபல்யம் அடைந்து வருகிறது.

ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை | Sri Lanka S Long Line Is Similar To The Russian

அண்மைகாலமாக எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தாம் பயன்படுத்தும் இயந்திரங்களுடன் எரிபொருளை பெற நீண்ட வரிசை காணப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்புள்ளையில் விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனை பார்க்கும் போது ரஷ்ய படைகள் கவச வாகனங்களுடன் உள்ளதை பிரதிபலிப்பதாக இருந்தது. விவசாயிகளும் தமது உழவு இயந்திரங்கள் மற்றும் பிற இயந்திரங்களுடனும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ரஷ்ய களமுனை நகர்வினை ஒத்ததாக இலங்கையின் நீண்ட வரிசை | Sri Lanka S Long Line Is Similar To The Russian

அதோபோன்று கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலைய இலங்கையில் ஏற்பட்டுள்ளமை குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் புடினுக்கு உக்ரைன் தலைநகரம் கிடைக்கிற மாதிரியும் இல்லை. இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதும் கனவாக மாறிவருவதாக சமூக ஊடகங்களில் பரவலாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட வரிசையின் கதாநாயகர்களான ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு எதிராக மக்கள் அணி வகுக்க தொடங்கியுள்ளமையின் ஆரம்ப புள்ளியாக இது இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ராஜபக்ஷகளால் கட்டியெழுப்பப்பட்டுள்ள குடும்ப ஆட்சி,  நீண்ட வரிசை எனும் அணுவாயுதம் மூலம் மக்கள் தும்சம் செய்யப் போவதாகவே அண்மைய நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன. 


GalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US