இலங்கை மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி செய்தி
கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையின் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முக்கிய காரணமாக சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி திட்டத்தின் வெற்றியே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக தடுப்பூசி வாரம்
இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான தடுப்பூசிகள் மூலம் பல்வேறு நோய்கள் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 24 முதல் 30 வரை கடைப்பிடிக்கப்படும் உலக தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் இலங்கை தடுப்பூசி வழங்கலில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் காரணமாக போலியோ, மற்றும் ரூபெல்லா போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளதுடன், பிற தொற்றுநோய்களின் பரவலும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த திட்டம் நாட்டின் ஆயுட்காலத்தை உயர்த்துவதிலும், குழந்தைகள் மரண விகிதத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக வைத்தியர் பாலித கருணாபேம சுட்டிக்காட்டியுள்ளார்.
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam