ரணில்-சுரேஷ் சலே கூட்டணியின் அட்டூயங்கள்: வெளிவந்துள்ள அதிர்ச்சித் தகவல்கள்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சிக்கு ஹன்ஸீர் ஆசாத் மௌலானா வழங்கிய கருத்துக்களை ஆதாரமாக கொண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்தார்.
குறித்த விசாரணை ஆணைக்குழுவின் தலைவரை ரணிக்கு பிரேதித்தது சுரேஸ் சலே என்ற அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை சுவிஸர்லாந்தில் இருந்து இயங்கும் இணையத்தளம் ஒன்று ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.
சலேவை காப்பாற்றிய ரணில்
குறித்த ஆணைக்குழு சுரேஸ் சலே ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளாரா? என்பதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவரை தெரிவு செய்தது சலே.
ஆதாவது தனது குற்றங்களை விசாரிப்பதற்கு தானே ஒருவரை நியமிப்பது வேடிக்கையானதாகவுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜயக்கி அல்விஸ் சலேவால் சிபாரிசு செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்.

கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவின் அத்தியட்சகராக செயற்பட்ட பிரசன்ன அல்விஸின் சகோதரியே நீதிபதி ஜயக்கி அல்விஸ் ஆவார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வங்கிகளில் இருந்த பணத்தை சூறையாடுவதற்கு கோட்டா மற்றும் சுரேஷ் சலேவுக்கு உதவி செய்தவர் தான் பிரசன்ன அல்விஸ்.
இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியை சேர்ந்தவர்களாவர். மேலும் இந்த பிரசன்ன அல்விஸின் மனைவி பிரதி பொலிஸ் மா அதிபர், அதாவது சுரேஷ் சலேவுடன் அரசாங்க புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவர்.இவ்வாறு அனைவரும் நெருங்கிய நண்பர்களாவர்.
விசாரணை அறிக்கை
மேலும் ரணில் விக்ரமசிங்கவிளால் 2024.06.12. நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு குறுகிய மூன்று கிழமைகளில் விசாரணைகள் நிறைவு செய்து சுரேஷ் சலே ஈஸ்டர் குண்டு தாக்குதலில் சம்பந்தப்படவில்லையென விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று சலேவுக்கு சார்பாக பேசுபவர்கள் இந்த ஜயக்கி அல்விஸின் விசாரணை அறிக்கையையே காரணம் காட்டி பேசுகின்றனர்.
ரணிலின் ஆட்சியில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மிக கடமையை கொண்டுள்ள ரணிலும் குற்றவாளிகளை காப்பாற்றவே முயற்சித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான காலத்தில் 2023 ஜுலை மாதம் ஓய்வு பெறும் வயதையடைந்த சுரேஷ் சலேவுக்கு ஒரு வருடம் பதவி நீடிப்பும் வழிங்கியுள்ளார்.
இந்த பதவி நீடிப்பு இரு முறை வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களை காப்பற்றவே முயற்சித்தமை ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam
ஜனனியை வெளியேறியதை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam