கென்யாவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 76வது சுதந்திர தினம்
கென்யாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் தீவு நாட்டின் 76வது சுதந்திர தினமானது இணையற்ற பிரமாண்டத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது.
பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புனிதமான மத அனுஷ்டானங்களுடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
இதன் போது உயர்ஸ்தானிகர் கனநாதன் தேசியக் கொடியை ஏற்றிவைக்க, இலங்கை தேசிய கீதத்தின் எதிரொலிக்கும் மெல்லிசைகளுடன், கென்ய பொலிஸ் இசைக்குழுவினால் இசைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி : பாரிய போராட்டம் முன்னெடுப்பு
பொருளாதார மீட்சி
இந்நிலையில் அங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர் கனநாதன், இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கான தற்போதைய பயணத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையிலான ஆழமான இருதரப்பு உறவுகள், பரஸ்பர வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிக்கும் வகையில் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கென்யா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதி ஆளுநர் நஜோரோக் முச்சிரி, தூதுவர் கனநாதனின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும், கென்யாவிலும் பரந்த ஆபிரிக்கப் பிராந்தியத்திலும் இலங்கையின் முதலீடுகளை எளிதாக்குவதிலும் அயராத முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
வர்த்தக மேம்பாடு
இந்த முயற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதில் பங்களிப்பை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கேபினட் அமைச்சர்கள், கென்யாவின் டிஆர்ஐ படைத் தலைவர் மற்றும் பிற குறிப்பிடத்தக்க பிரமுகர்கள், கென்யாவில் வசிக்கும் தூதுவர்கள், இராஜதந்திர பிரதிநிதிகள், ஐ.நா அதிகாரிகள், வர்த்தக தலைவர்கள் மற்றும் இலங்கை சமூகம் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |