இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வலுவடைந்து வருகிறது.
அதன்படி இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.97 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் டொலரின் விற்பனை பெறுமதி 312.60 சதமாக காணப்படுகிறது.
நேற்றைய தினத்திற்கான நிலவரம்
இதேவேளை நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.04 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 312.68 ரூபாவாகவும் காணப்பட்டது.
மேலும் கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையாற்றும் போது சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 16 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
